பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் கே.எஸ்.மூர்த்தி, ராஜேஸ்குமார் பங்கேற்பு

நாமக்கல், பிப்.23: மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும், நேற்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், மாநில நிர்வாகிகள் மணிமாறன், கைலாசம், ராணி, நக்கீரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, சரஸ்வதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் பழனிசாமி, பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், நவலடி, கௌதம், துரை ராமசாமி, துரைசாமி, ஜெகநாதன், பாலசுப்ரமணியம், பழனிவேல், செந்தில்முருகன், நகர செயலாளர்கள் சங்கர், ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நிர்வாகிகள் அறிவழகன், ராணி, கதிர்வேல், ஆனந்தன், இளம்பரிதி, மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி வரவேற்றார். இதில் முன்னாள்  மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி. மொழிப்போர் தியாகி பரமானந்தம், மாவட்ட பொருளாளர் குமார், அம்பிகா பாண்டியன், அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள்    கபிலர்மலை சண்முகம்,  மல்லை பழனிவேல், கருணாநிதி, எலச்சிபாளையம் தங்கவேல்,  குமரமங்கலம் செல்வராஜ், நகர செயலாளர்கள் ரவிச்சந்திரன், குமாரபாளையம் பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலாளர் நடேசன், தமிழரசு, மணிமாரப்பன், ரமேஷ்பாபு, கதிர்வேல், திருமலை, கருணாநிதி, மகாமுனி,  ராமலிங்கம், கார்த்திராஜா, மதுரா செந்தில், ஜிஜேந்திரன், கிரிசங்கர், பூங்கோதை செல்லதுரை, சரவணமுருகன், ராஜபாண்டி ராஜவேலு, செல்வராஜ், ரியா, தாமரைச்செல்வன், தாண்டவன், விசாலாட்சி, கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் நன்றி கூறினார்.

Related Stories: