கிழக்கு மாவட்டத்தில் நாளை ஜெயலலிதா பிறந்த நாள் விழா அசோக்குமார் அறிக்கை

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நாளை(24ம் தேதி) மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில், நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் கண் தானம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம், கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நலஉதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>