18,189 மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 18,189 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், எல்காட் நிறுவனம் மூலம் அரசு மற்றம் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 30 மாணவ, மாணவிகளுக்கு, 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கே.பி.முனுசாமி எம்பி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு டேட்டா கார்டுகளை வழங்கினார்.

இதில் கலெக்டர் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக மொத்தம் 27 கல்லூரிகளில் பயிலும் 18,189 மாணவ, மாணவிகளுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதனை பெற்று, சிறப்பான முறையில் கல்வி பயின்று விருப்பமான துறையில் சிறந்து விளங்க வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குப்புசாமி, வேளாண்மை  விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் தங்கமுத்து, ஒன்றியக்குழு தலைவர்கள் கிருஷ்ணகிரி அம்சராஜன், பையூர் ரவி, முன்னாள் எம்எல்ஏ., முனிவெங்கட்டப்பன், பர்கூர் அரசு கல்லூரி முதல்வர் நாகராஜ், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி முதல்வர் லட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: