பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ பண்ணாரி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பண்ணாரி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் வேன் மீது நின்று பிரசாரத்தில் ஈடுபட்ட போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென அதிமுக வேட்பாளர் பண்ணாரியிடம் ‘‘எங்க ஊருக்கு என்ன நல்லது செய்தாய்’’ என கையை நீட்டியபடி கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு திகைத்து போன வேட்பாளர் பண்ணாரி, பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் அருகில் இருந்த அதிமுகவினர் அந்த இளைஞரை தாக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்து அந்த இளைஞரை அதிமுகவினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதோடு வேட்பாளர் பண்ணாரியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
