×

23 ஆட்டோக்கள் மூலம் நாமக்கல்லில் விழிப்புணர்வு

நாமக்கல், ஏப்.16: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி, பெண்களால் இயக்கப்படும் 23 ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் நாளான ஏப்ரல் 23 என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆட்டோக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, சேலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆட்டோக்களில் தேர்தல் நாள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், சி-விஜில் செயலி, ஆகியவை அடங்கிய பதாகைகள் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் இந்தியா, ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,Namakkal District Collectorate ,Labor Welfare Department ,District ,Collector ,Durgamoorthy.… ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு