- விஜய்
- இராசிபுரம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- திமுக
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிய) மாநில நிர்வாகக் குழு
- Soundararajan
- மாதிவேந்தன்
ராசிபுரம், ஏப்.16: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து, திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்திரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், `வேட்பாளர் மதிவேந்தன் அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றியவர். மீண்டும் அவர் வெற்றி பெற்றால், இந்த தொகுதிக்கு நிறைய திட்டங்கள் வரும். தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு ஓட்டு போட்டால், அது செல்லாத ஓட்டு. அதனால், யாரும் எம்எல்ஏ ஆகமாட்டார்கள். அதே போல, அதிமுக கூட்டணியை சேர்ந்த பாஜவிற்கு ஓட்டு போட்டால் அது பொல்லாத ஓட்டு. எனவே, அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்,’ என்றார். இந்த பிரசாரத்தின் போது, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
