பெங்களூரு: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 49 ரன்களும், ரஜத் படிதார் 27 ரன்களும் எடுத்தனர்.
