விரைவில் நீல சீருடை சச்சின் சாதனையை முறியடிக்க வரும் வைபவ்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார்.

நடப்புத் தொடரில் வெறும் 4 போட்டிகளில் 200 ரன்களைக் குவித்துள்ள வைபவ், 260-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். வைபவின் அசாத்தியமான திறமையைக் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, அவரை நேரடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் கட்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கும் என்பதால், வைபவை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்த இதுவே சரியான தருணம் என பிசிசிஐ கருதுகிறது. மேலும், ஜிம்பாப்வே தொடரிலும் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. வைபவ் சூர்யவன்ஷி இப்போது இந்திய அணியில் அறிமுகமானால், இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். சச்சின் தனது 16 வயது 205 நாட்களில் அறிமுகமானார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது மட்டுமே ஆகிறது.

Related Stories: