நான் தனித்து போராடுகிறேன்; பாஜ ஆளும் 19 மாநிலங்களும், ஒன்றிய அரசும் கூட்டு சேர்ந்து என்னை எதிர்க்கின்றன: மம்தா குற்றச்சாட்டு

சுரி: “பாஜ ஆளும் 19 மாநிலங்களும், ஒன்றிய அரசும் என்னை எதிர்கொள்ள கூட்டு சேர்ந்துள்ளன” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்கத்தின் 294 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே பல்வேறு விவகாரங்களில் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், ஒன்றிய பாஜ அரசுக்கும் கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. எஸ்ஐஆர் பணிக்கு பிறகு அங்கு அண்மையில் வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சுரி என்ற பகுதியில் நேற்று நடந்த பிரசார பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நாட்டின் 19 மாநிலங்களில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) ஆட்சி செய்கின்றன. இந்த 19 மாநிலங்களும், ஒன்றிய பாஜ அரசும் என்னை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் நான் சாமானிய மக்களுக்காக எப்போதும் தனியாக போராடுகிறேன். டெல்லியில் இருந்து வரும் படைகளின் பலத்தை பயன்படுத்தி மேற்குவங்கத்தில் பாஜ வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

Related Stories: