வால்பாறை அருகே விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக வேட்பாளர் சுதாகர்

 

வால்பாறை: வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுதாகர் சோலையார் அணை பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தார். சோலையார் அணை அருகே பைக் மற்றும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சாலையில் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த திமுக வேட்பாளர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.

காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி அளிக்கப்பட்டதால், அவர்களின் உயிர் காக்கப்பட்டது என கூறப்படுகிறது. வேட்பாளரின் இந்த மனிதநேய செயல் அங்கு இருந்த பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றதுடன், அதை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேர்தல் சூழலில் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: