சொந்த குடும்பத்தையே காப்பாற்றாத விஜய் மக்களை எப்படி காப்பாற்றுவார்? தவெக வேட்பாளரை வறுத்தெடுத்த பெண்கள்: பிரசாரம் செய்யாமல் ஓட்டம்

கோவை மாவட்டம், சூலூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சுகுமார் நேற்று முன்தினம் கண்ணம்பாளையம் வார சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு கேட்டார். அப்போது அங்கு காய்கறி விற்கும் 2 பெண்கள் வேட்பாளரிடம் கிடுக்கி பிடி கேள்விகளை கேட்டனர். ‘‘அண்ணா நீங்க ஓட்டு கேட்டு வந்திருக்கீங்க… உங்க தலைவர் அவர் சொந்த குடும்பத்தையே கவனிக்க மாட்டேங்கறாரு… குடும்ப பெண்களை கவனிக்க மாட்டேங்கிறாரு…. இதுல பொதுமக்களை எப்படி கவனிப்பாரு…

தன் ரத்த உறவுகளையே பார்க்காத விஜய், தமிழ்நாட்டு மக்களை எப்படி கவனிப்பார் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் தவெக வேட்பாளர் சுகுமார் திணறினார். விஜய் அண்ணாவை தப்பாக நாங்க சொல்லலை. ஆனால் ஒரு தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையும், சின்ன புள்ளைகளையும் உங்க கட்சி நிர்வாகிகள் தப்பாக அவதூறாக பேசுவதை ஏன் தடுக்கவில்லை.

நாங்க எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இது எல்லாம் என்ன வார்த்தைகள், இவற்றை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’’ என கேள்வி எழுப்பினார். பெண் வியாபாரிகள் அடுத்தடுத்து கேட்ட கேள்விகளால் நிலைகுலைந்து போன வேட்பாளர் சுகுமார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் தொடர்ந்து கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்ததால் அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டார். வேட்பாளர் சென்ற பின்னரும் அந்த பகுதியில் விஜய் பற்றிய பேச்சாகவே இருந்தது.

Related Stories: