யானை நடமாட்டம் காரணமாக டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை

பந்தலூர்,பிப்.21: பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியில் சேரம்பாடியில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பிரதான சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதியில் மதுக்கடை அமைந்துள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். மதுஅருந்த வரும் மதுப்பிரியர்களின் கூட்டமும் எப்போதும் இருப்பதால், யானை மனித மோதல்கள்  ஏற்படும் நிலை உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>