- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக
- வசந்தாவேலா
- அரசூர் கூட்ரோடு
- உளுந்தூர்பேட்டை
- உதயநிதி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சசிகலா
உளுந்தூர்பேட்டை தொகுதி அரசூர் கூட்ரோடு பகுதியில் திமுக வேட்பாளர் வசந்தவேலை ஆதரித்து நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது சசிகலா காலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுந்த புகைப்படத்தை பொதுமக்களிடம் காண்பித்து துணைமுதல்வர் உதயநிதி பேசியதாவது: இந்த புகைப்படம் தெரியுதா, இதில் உள்ளவர் யார் என்று தெரியுதா? அது கார்பெட் இல்லை, ஒரு ஆள்படுத்து இருக்கிறார். இப்பவாவது தெரியுதா யார் என்று? இந்த அனுபவம் எனக்கு கிடையாது.
டெல்லிக்கும், சங்கி கூட்டத்துக்கும் காலில் விழும் அனுபவமும், பதவிக்காக காலில் விழும் அனுபவமும் உண்டு, எனக்கு இல்லை. இதைதான் நான் சொன்னேன். நாம் டேபிளில் உட்கார்ந்து படிப்போம், சாப்பிட பயன்படுத்துவோம். ஆனால், ஒருத்தர் இருக்கிறார். டேபிளை பார்த்தாலே உள்ளே புகுந்து போயிடுவார். இதைதான் நான் சொன்னான். அதுமட்டுமில்லை, மைண்டு வாய்ஸ் என நினைத்து ஓப்பனாக பேசியுள்ளார். என்னுடையே பெயர் சொல்லியே சொன்னார், என் உயிரை வாங்குறான் உதயநிதி.
அவர் உயிரை வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. தயவு செய்து டென்ஷன் ஆகாதீங்க பி.பி. மாத்திரை போட்டுக்கோங்க, நீண்ட ஆயுளோடு உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி எங்களுடைய ஒரே ஆசை நிரந்தரமாக அதிமுகவுக்கு பொது செயலாளராக நீங்கதான் இருக்க வேண்டும். அப்போது தான் எங்களுக்கு ரொம்பா ஈஸியாக இருக்கும். நீங்க ரொம்ப வருடம் இருக்க வேண்டும். எந்த பிரச்னையும் வரக்கூடாது.
உதயநிதி நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், அதாவது ஒருவரை திட்டும்போது கூட கால் என்ற வார்த்தையை வைத்து திட்டுகிறார். அவருக்கு, காலுக்கு அவ்வளவு பொருத்தம். முன்னாடி ஜெயலலிதா அம்மா கால், அந்த அம்மா இறந்த பிறகு சசிகலா அம்மா கால், அவங்க ஜெயிலுக்கு போன பிறகு டிடிவி தினகரன் காலில் விழுந்தார். அப்போது, அவருடைய காலை வாரிவிட்டார். பின்னர் ஓபிஎஸ் காலை வாரிவிட்டார். இப்போது ஓபிஎஸ் நம் டீமுக்கு வந்துவிட்டார். அவரை துரத்திவிட்டு, தற்போது டெல்லிக்கு சென்று, மோடியின் காலை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
