×

மதுரை மத்தியில் வெற்றி பெற்றால் இறைச்சிக்கு தடை? சுந்தர்.சி அலறல்

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘‘நான் வெளியூரிலிருந்து வந்தவன் என்று கூறுகிறார்கள். என்னை பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. நான் வெற்றி பெற்றால் கறிக்கடைகளை மூடுவேன் என பொய் பிரசாரம் செய்கின்றனர். நான் ஒரு வாரத்தில் 6 நாள் கறிசோறு சாப்பிடுபவன். என்னை பார்த்து இப்படி சொல்கிறார்கள். வெற்றி பெற்றவுடன் மிகப்பெரிய கறி விருந்து அளிப்பேன்’’ என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது, ‘‘என் கணவர் எந்த ஒரு கறையும் படியாதவர். அவரை விமர்சிக்க வேண்டும் என்றால் என்னை தான் விமர்சித்து பேசுவார்கள். பேசட்டும், எவ்வளவு வேணாலும் பேசட்டும். இதுவும் பாத்தாச்சு. இதுக்கு மேலேயும் பாத்தாச்சு. எனது கணவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். ஏனென்றால் எம்.ஜி.ஆர், என் கணவரின் கனவு ஹீரோ. மதுரை மக்கள் நம்ம வீட்டு பிள்ளையாக நினைத்து என் கணவருக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Madurai ,Sunter ,C. ,Sundar ,Central Constituency ,C ,SLANDER ,
× RELATED சொல்லிட்டாங்க…