×

சசிகலா கால ஆசி வாங்க தேடுனேன்: எடப்பாடி திடீர் விளக்கம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூரில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி காலை தேடினார் (சசிகலாவின் காலில் விழுந்தது) என்று உதயநிதி பேசுகிறார். தமிழர் பண்பாடு அது. ஒரு பொறுப்பு கிடைக்கும்போது ஆசி பெறுவது தவறா..? பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தோழா என்று எம்.ஜி.ஆர். பாடல் இருக்கிறது. நான் பேசினால் நிறைய பேசலாம், பேச வைக்கிறார்கள்.

என் 51 ஆண்டு காலத்தில் தரக்குறைவாக பேசியதில்லை, என்னைப் பற்றி பேசினால் விடமாட்டோம் என்றார். சசிகலாவை பற்றி கடுமையான விமர்சனங்களை செய்ததோடு, அவரால் நான் முதல்வராகவில்லை, எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்ததால் முதல்வரானேன், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது திடீரென பொறுப்பு கிடைத்தபோது ஆசி பெறுவது தவறா என்று கேட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Tags : Ashi ,Edapadi ,Veeraganur ,Kengavalli Assembly Constituency of Salem District ,Supreme Candidate ,Nalladambi ,Udayanidhi ,Edappadi ,Sasikala ,
× RELATED சொல்லிட்டாங்க…