- அஇஅதிமுக
- அமைச்சர்…
- சசிகலா பாகிர்
- சக்ரவர்த்தி
- மதுரை மத்திய
- சசிகலா
- பொதுச்செயலர்
- ஆரப்பாளையம் குறுக்கு சாலை
- ஜெயலலிதா
மதுரை மத்திய தொகுதியில் அஇபுதமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்கரவர்த்திக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது: அதிமுகவில் துரோகிகள் அதிகமாகி விட்டார்கள். ஜெயலலிதா இருக்கும்போது அப்படி எல்லாம் இல்லை. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒரு இளைஞரை, அதிமுக முன்னாள் அமைச்சர் கடத்திச் சென்று விட்டார்.
35 வருடமாக ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். நான் இந்த சலசலப்பிற்கெல்லாம் பயப்படுபவள் கிடையாது. ஜெயலலிதாவும், நானும் எவ்வளவோ பார்த்து விட்டுத்தான் வந்துள்ளோம் . நீங்கள் எங்களை நான்கு வருடம் சிறையில் அடைத்தீர்கள். அப்படி எல்லாம் செய்தால் பயந்து போய் விடுவோம் என்று நினைத்தீர்களா? அதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது. அதனால்தான் வந்ததை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.
