×

நச்னு நாலு கேள்வி: நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதியிலும் வெற்றி: குமாரபாளையம் திமுக வேட்பாளர் பாலு

​1 குமாரபாளைத்தில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவான அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள். தற்போது, அவருக்கு நீங்கள் கடுமையான போட்டியாக உள்ளீர்கள் என்று தொகுதியிலேயே பேசப்படுகிறதே?
நான் ஏற்கனவே இரண்டு முறை ஒன்றிய சேர்மனாக இருந்திருக்கிறேன். அதனால் இந்த தொகுதி முழுவதும் எனக்கு அறிமுகமான தொகுதிதான். எனவே, எல்லா விதத்திலும் அங்கு போட்டி இருக்கத்தான் செய்யும்.

2 அமைச்சராக இருந்தபோது தங்கமணி மீது நிலக்கரி ஊழல், சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த தேர்தலில் இதெல்லாம் அவருக்கு எதிராக அமையுமா?
வழக்குகளைப் பற்றி நாம் முடிவெடுக்க முடியாது, நீதிமன்றம்தான் அதை முடிவு செய்யும். ஆனால், தொகுதியில் ஏற்கனவே எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த வழக்குகளுக்காக மட்டுமல்ல, எனக்கு இருக்கும் நற்பெயர் காரணமாகவும் மக்கள் எனக்கு நல்ல வாக்குகள் அளிப்பார்கள்.

3 குமாரப்பாளையம் தொகுதியின் கள நிலவரம் எப்படி உள்ளது. தொகுதியின் வளர்ச்சிக்கு நீங்கள் முன்வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?
இந்த தொகுதியில் முக்கிய சவாலாக நான் கருதுவது, ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதைத் தடுத்து, அங்கு ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான். அத்துடன் சில பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதே பிரதான நோக்கம். அதேபோல், ஏற்கனவே அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. புதிய வாக்குறுதிகள் என்று சொல்வதை விட, அனைத்து நலத்திட்டங்களையும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சேர்ப்பேன். குறிப்பாக, சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதே முக்கிய வாக்குறுதியாக இருக்கும்.

4 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த முறை திமுக கூட்டணி 4 இடங்களில் வென்றது. இந்த முறை திமுக அறிவித்த திட்டங்கள் உங்களுக்கு எவ்வளவு சாதகமாக இருக்கும்?
திமுக வழங்கிய நலத்திட்டங்களைப் பார்க்கும்போது, இந்த முறை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என்று நினைக்கிறோம். கள நிலவரமும் எங்களுக்கு மிகவும் சாதகமாகவே உள்ளது.

Tags : Nachnu Nalu ,Kumarapalayam ,DMK ,Balu ,Namakkal district ,AIADMK ,minister ,Thangamani ,
× RELATED சொல்லிட்டாங்க…