எஸ்டிபிஐ கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அளித்த பேட்டி: வரக்கூடிய வருஷம், இந்த வருஷம் நம்ம பிள்ளைகள் எல்லாம் ஸ்கூலுக்குப் போகணும். ஏப்ரல் மாசம் முடிஞ்சு ஜூன் மாசம் ஸ்கூலுக்குப் போவாங்க. போயிட்டு எல்லாரும் அங்கே தமிழும், இங்கிலீஷும் மட்டுமில்ல, இந்தியும் சேர்ந்து படிக்கணும் என்று சொல்லி சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஒரு உத்தரவினை இந்த ஒன்றிய அரசு தந்திருக்கிறது. எவ்வளவு பெரிய அநியாயம். ஐயா, நான் என்ன மொழியில் பேசணும்னு நான் தானே ஐயா சொல்லணும்?. நான் இங்கிலீஷ்ல பேசணுமா, நான் தமிழ்ல பேசணுமா என்று நாங்கள் எடுக்கிற முடிவை டெல்லியிலிருந்து ஒருவன் எடுக்கிறான். நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும். உங்கள் பிள்ளைகள் எல்லாம் இந்தியில் படிக்க வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு பெரிய அநியாயம். இதை எல்லாம் யார் தட்டிக் கேட்க வேண்டும்.
இன்றைக்கு தமிழ்நாடு தான் அதை தட்டிக்கேட்டிருக்கிறது. தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்தி மொழியை தமிழ்நாட்டிலே திணிப்பதற்கு இந்த அரசு ஒருபொழுதும் அனுமதிக்காது என்று சொல்லி நெஞ்சுரத்தோடு சொல்லியிருக்கிறாரே. அப்படிச் சொல்வதற்கு இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவருக்கு அருகதை இருக்கிறதா? தமிழ்நாட்டில் இந்தியை திணிக்காதீங்க அய்யா என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?. என்றால் இல்லை. காரணம். அவர்கள் டெல்லிக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் இந்திக்கு அடிமையாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே எங்கும் இந்த என்டிஏவினுடைய கூட்டணி, பாஜவினுடைய கூட்டணி வெல்லாது. இலை விழத்தான் போகிறது. உதயசூரியன் இங்கே உதிக்கத்தான் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
