×

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுக இளைஞர் அணி வெளியிட்ட அறிவிப்பு:
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞர் அணிச் செயலாளர்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இரண்டு கட்ட பரப்புரை முடித்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலை சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து காலை 10.30 மணி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகிலும், காலை 11.30 மணி அம்பத்தூர் பழைய எம்.டி.எச்.சாலை, முருகன் கோயில் அருகிலும், மாலை 4 மணி கொளத்தூர் ஜம்புலிங்கம் சாலை, ஜி.கே.எம்.குடியிருப்பு பகுதியிலும், மாலை 4.45 மணி வில்லிவாக்கம் போர்ச்சிஸ் சாலையிலும், மாலை 6 மணி எழும்பூர் தானா தெரு, புரசைவாக்கம், 6.45 மணி துறைமுகம் மகாசக்தி ஓட்டல், மின்ட் சாலை, சவுகார்பேட்டை, இரவு 7.45 மணி ராயபுரம் சிமென்ட் சாலை – திருவொற்றியூர் சாலை சந்திப்பிலும். இரவு 8.30 மணி ஆர்.கே.நகர் காசிமேடு சிக்னல், எஸ்.என்.செட்டி தெரு சந்திப்பிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

9ம் தேதி (நாளை) காலை 9.30 மணி பொன்னேரி பஜார் தெரு, காலை 10.30 மணி மாதவரம் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரிலும், காலை 11.30 மணி பெரம்பூர் அசோக் பில்லர், சத்தியமூர்த்தி நகர் சாலை, வியாசர்பாடியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 4 மணி அண்ணா நகர் டி.பி.சத்திரம், அண்ணா நகரிலும், மாலை 4.45 மணி ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா அருகிலும், மாலை 6 மணி தியாகராய நகர் முத்துரங்கன் சாலை, பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6.45 மணி விருகம்பாக்கம் மார்க்கெட், எம்.ஜி.ஆர். நகரிலும், இரவு 7.45 மணி சைதாப்பேட்டை வேளச்சேரி சாலை, சின்னமலையிலும், இரவு 8.45 மணி சோழிங்கநல்லூர் சர்ச் சாலை, கந்தன்சாவடியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deputy Chief Assistant Commissioner ,Chennai ,Suburban ,Districts ,Udayaniti Stalin ,Deputy ,Dimuka Youth Team ,Dimuka Chairman ,Chief Minister ,Mu. K. ,Stalin ,
× RELATED கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்...