சென்னை, ஏப்.8: பாமக சார்பில் ஊடக மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் பாமக சார்பில் பங்கேற்கக்கூடியவர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, முன்னாள் எம்பி மருத்துவர் இரா.செந்தில், கலை, இலக்கிய அணித் தலைவர் மருத்துவர் தெ.வேலாயுதம், வழக்கறிஞர் ந.வினோபா பூபதி மற்றும் த.சூர்யபிரகாஷ், ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்பார்கள். மணிகண்டன் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
