×

பாஜ கூட்டணியை தோற்கடிக்க மலையின் ‘அன்பு கூட்டம்’ ரெடி

சீட் கிடைக்காத விரக்தியில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் வருகிற தேர்தலில் உள்ளடி வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அண்ணாமலையின் அன்பு கூட்டம் என அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பினர் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள், அண்ணாமலைக்கு சட்டசபை தேர்தலில் முக்கியம் தரவில்லை. இதுபோல் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கவில்லை. எனவே அ.தி.மு.க, பா.ஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம், அவர்களை தோற்கடிக்க வேலை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பா.ஜ, அ.திமு.க. வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்கள், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் யார்? யார்? என கணக்கெடுத்து வருகிறார்களாம்.

Tags : Baja alliance ,Annamalai ,Annamalai's Love Gathering ,Goa ,Tiruppur ,
× RELATED கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்...