காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் உண்டியல் திறப்பு

ஆட்டையாம்பட்டி,  பிப். 19:  சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி  கந்தசாமி கோயிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழா முடிந்து 20  நாட்கள் ஆன நிலையில், நேற்று கோயிலில் உள்ள 10 உண்டியல்கள்  திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல்  மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு தலைமையில், அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி, கோயில் நிர்வாக அலுவலர்  முருகன், பரம்பரை அறங்காவலர் பூசாரி சரஸ்வதி சதாசிவம் ஆகியோர் முன்னிலையில், வெங்கடேஸ்வரா நண்பர்கள் குழு மற்றும் தனியார் கல்லூரி  மாணவ, மாணவிகள், கோயில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  இதில்  ₹23 லட்சத்து 41 ஆயிரத்து 731 ரொக்கம், 29.5 கிராம் தங்கம் மற்றும் 220  கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related Stories: