×

தேஜகூ வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்வேன்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்வேன் என அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதள பதிவு: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜ வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜ மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்வேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tejashwi ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,2026 Tamil Nadu Assembly elections ,BJP… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது