×

ஓட்டுநர் மகனுக்கு தேர்தலில் சீட் ராஜேந்திரன் விஜய்யின் பினாமியா? சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்

சென்னை: ஓட்டுநர் மகனுக்கு தேர்தலில் விஜய் சீட் கொடுத்தது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு தகவல்களை கூறி, சந்தேகம் கிளப்பி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். தவெகவினர் தரப்பில் விஜய் தனது கார் ஓட்டுநராக பல ஆண்டுகளாக இருந்த ராஜேந்திரனின் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார் என புளகாங்கிதம் அடைந்து வந்தனர். ஆனால், உண்மையில் ராஜேந்திரன் விஜய்யின் ஓட்டுநராக மட்டும் இல்லை என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விஜய் நிர்வாக இயக்குநராக உள்ள ஜெயாநகர் பிராபர்ட்டி நிறுவனத்தில் ராஜேந்திரன் இயக்குநராக உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்யின் பினாமி என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விஜய் செல்லும் எல்லா இடங்களுக்கும் ராஜேந்திரனை கூட்டிச் செல்கிறார் என்றும் விஜய்யின் அந்தரங்க விஷயங்கள் அனைத்தும் தெரிந்தவர் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Rajendran Vijay ,Chennai ,Vijay ,Thavekavinas ,Rajendran ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...