×

மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

போடி: தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது மீனாட்சிபுரம் கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராதாகிருஷ்ணன் (34) அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த 10 மதுபான பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. செல்வம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஓடைப்பட்டி மூர்த்திநாயக்கன்பட்டி தாதமுத்தன் கண்மாய் பகுதியில் கண்காணித்தனர். அப்போது அப்பிபட்டி (எ) அழகாபுரியை சேர்ந்த அய்யர் மகன் பிரபு (35) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Tags : BODI ,SI VIJAY ,BODI TALUKA POLICE STATION ,Murugan ,Radakrishnan ,Meenakshipuram Kannimar Temple Street ,Meenakshipuram ,
× RELATED ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்த மனித வடிவ ரோபோ அறிமுகம்