காரணங்களைக் கூறுவதை தவிர்த்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை; தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது.

தமிழகத்தின் மின்தேவை அதிகரித்தால், அதை சமாளிக்க முடியாத நிலை இருப்பதை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உறுதி செய்திருக்கின்றன. இனி வரும் ஆண்டுகளில் மின்தேவை மேலும், மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்ள உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: