×

பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை அதிகாரி ஆய்வு

திருப்பூர், ஏப். 2: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை திருப்பூர் மாநகர, மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் (காவல் துறை) ராகுல் ஹெக்டே நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட அறிவுரைகள் வழங்கினார்.

 

 

Tags : Tiruppur ,Tamil Nadu Assembly ,Tiruppur Metropolitan City ,District Election Supervisor ,Annanagar ,Palladam Sub- ,Tiruppur district ,
× RELATED திருப்பூர், வெள்ளகோவிலில் சூதாட்டம்-9 பேர் கைது