திருப்பூர், மார்ச் 31: திருப்பூர் தெற்கு போலீசார் தென்னம்பாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வஞ்சிநகரை சேர்ந்த மணிகண்டன் (30), மூகாம்பிகை நகரைசேர்ந்த ஆனந்தபாபு (33) ஆகியோர் என்பதும், அவர்களிடம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
