- திருமூர்த்திமலை தர்கா
- உடுமலை
- திருமூர்த்திமாலை
- அம்மனலிங்கஸ்வரர் கோயில்
- பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி
- திருமூர்த்தி அணை
- ஆடம்ஷா தர்கா
உடுமலை, ஏப். 2: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை ஆகியவை உள்ளன. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். மலையில் பஞ்சலிங்க அருவியின் கிழக்கு பகுதியில் ஆதம்ஷா தர்கா உள்ளது. ஆனைமலை முஸ்லிம் ஜமாத்தின் பராமரிப்பில் உள்ள இந்த தர்காவுக்கு அவ்வப்போது, முஸ்லிம்கள் வந்து செல்கின்றனர். தர்காவுக்கு தரை பகுதியில் இருந்து சுமார் 6 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும்.
வனப்பகுதியில் உள்ளதால், அதிகபட்சமாக இதுவரை 10, 15 பேர் தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று 60-க்கும் மேற்பட்டோர் தர்காவுக்கு செல்ல வந்தனர். அதிகம்பேர் வந்ததால், வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இவ்வளவு பேரை அனுமதிக்க முடியாது என்றனர். வந்தவர்கள் அங்கேயே காத்திருந்தனர். பின்னர், உயர் அதிகாரிகளிடம் வனத்துறையினர் பேசியதையடுத்து, அனைவரும் தர்காவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
