திருப்பூர், மார்ச்31: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை விற்பனை செய்யப்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, கடைகள் செயல்படுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வறிப்பினை மீறி செயல்படும் கடைகளின் மீது, மாநகராட்சி சட்ட விதிகளின்படி, அபராதம், பறிமுதல் கடைகளை பூட்டி சீல் வைத்தல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
