மு.க.ஸ்டாலின், உதயநிதி, ஓபிஎஸ் உள்பட திமுக நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு: தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை: தமிழக தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு தொடங்கிய நிலையில் திமுக நட்சத்திர பேச்சாளர்களாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பிரசாரத்திற்குத் தயாராகி வருகின்றன. வாக்காளர்களை நேரடியாக சென்றடையும் வகையில் பெரிய கூட்டங்கள், ரோடு ஷோக்கள், சமூக ஊடக பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை முன்னிறுத்தும் முயற்சியில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நட்சத்திர பேச்சாளர்களின் பெயர் பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிகபட்சம் 40 பேரையும், அங்கீகாரம் பெறாத கட்சிகள் 20 பேரையும் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கலாம்.

இந்த பட்டியலில் இடம் பெறும் பேச்சாளர்கள் மேற்கொள்ளும் பிரசார செலவுகள், அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த பேச்சாளர்களின் பயணம் மற்றும் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான சில செலவுகள் கட்சியின் கணக்கில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

அதன்படி, திமுக நட்சத்திர வேட்பாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்பாலு, கே.என்.நேரு, ஓ.பன்னீர்செல்வம், எம்.பி. கனிமொழி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திருச்சி சிவா, ஆ.ராசா, மதிவதனி உள்ளிட்ட 40 பேர் கொண்ட திமுக நட்சத்திர பேச்சாளர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதிமுக சார்பில் வைகோ உட்பட 620 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Related Stories: