இமாச்சல பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: உயிரிழப்பு ஏதுமில்லை என தகவல்.!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பயணிகள் ரயில் இன்று காலை தடம் புரண்டு விபத்தி ஏற்பட்டுள்ளது. இமாசல பிரதேசத்தில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நிலச்சரிவால், சில கற்கள் உருண்டோடி வந்து பரோக் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்துள்ளன.இதனையடுத்து, கல்கா நகரில் இருந்து சிம்லா நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று இன்று காலை 7.45 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயிலில் 9 பயணிகள் இருந்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்.இதுகுறித்து கல்கா – சிம்லா ரெயில்வேயின் தலைமை வர்த்தக ஆய்வாளர் அமர் சிங் தாக்கூர் கூறும்போது, மண்டல ரயில்வே அதிகாரிகளின் உத்தரவின்படி, வாடகைக்கு வாகனங்களை உபயோகித்து சாலை வழியே பயணிகள் அனைவரும் அவர்களுடைய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்….

The post இமாச்சல பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: உயிரிழப்பு ஏதுமில்லை என தகவல்.! appeared first on Dinakaran.

Related Stories: