×

சிஏபிஎப் மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட 5 மத்திய ஆயுத காவல் படைகளில் அதிகாரிகளின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய ஆயுத காவல் படைகள் பொது நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை அதிகரித்து உயர்மட்ட பதவிகளை அவர்களுக்கு மட்டுமே ஒதுக்குவதை சட்டப்பூர்வமாக்குகிறது. இதனால் கேடர் அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இம்மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். இதன் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : New Delhi ,5 Central Armed Police Forces ,CRPF ,CISF ,Rajya Sabha ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும்...