×

அசாமில் தேயிலை பறித்தபடி வாக்குசேகரித்த பிரதமர் மோடி

கவுகாத்தி: அசாம் தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி தேயிலை பறித்து பெண் தொழிலாளர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். அசாம் சட்ட பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று திப்ரூகர் சென்றார். திப்ரூகரில் உள்ள மனோகரி எஸ்டேட்டுக்கு நேற்று காலை சென்று பார்வையிட்டார். தேயிலை தோட்டத்திற்கு சென்று தேயிலையை பறித்தார். அப்போது அருகில் நின்றிருந்த பெண் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிடுகையில்,தேயிலைதான் அசாமின் ஆன்மா. இங்கிருந்து வரும் தேயிலை உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. இன்று(நேற்று) காலை திப்ரூரில், நான் ஒரு தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று அங்கு பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடினேன். அது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாமின் பெருமையை உயர்த்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

* காங்கிரஸ் மீது தாக்கு
தேமாஜி மாவட்டத்தில் உள்ள கோகாமுக்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில்,அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க ஒரு சட்டத்தை கொண்டு வரும். அந்த சட்டத்தை பாஜவும் அதன் கூட்டணி கட்சிகளும் அனுமதிக்க மாட்டார்கள். பெரும்பான்மை சமூகத்தைச் சிறுபான்மையினராக மாற்றி, ஊடுருவல்காரர்களுக்கு நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்குவதே அதன் நோக்கம் என்றார்.

Tags : Modi ,Assam ,Guwahati ,Dibrugarh ,Assam Legislative Assembly elections ,Manokari Estate ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும்...