ஜப்பானில் 5.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டோக்கியோ வரை உணரப்பட்ட அதிர்வுகள்

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

ஜப்பானின் கிழக்கு இபராகி மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்தியப் பகுதிகளிலும் பலமாக உணரப்பட்டது. நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குறிப்பாக, இபராகி மாகாணத்தில் அமைந்துள்ள டோக்காய் எண். 2 அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு எவ்வித அசாதாரண சூழலும் ஏற்படவில்லை என்பதும், அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: