×

பேனர் வைத்த 7 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஏப்.1: பர்கூர் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சுவர் விளம்பரம் மற்றும் கட்சி பேனர் வைக்க கட்டுப்படு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிஆர்ஜி மாதேப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதன்பேரில், பர்கூர் போலீசார் விசாரித்து விதி மீறி பேனர் வைத்ததாக பிஆர்ஜி மாதேப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன்(42) உள்பட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Krishnagiri ,Bargur ,Tamil Nadu ,
× RELATED மனைவியை தாக்கிய கணவன் கைது