தர்மபுரி, ஏப்.1: தர்மபுரி மாவட்டம், எர்ரண அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (55), விவ‘சாயி. நேற்று முன்தினம் புளிக்கரை விரைவு நான்கு வழிச்சாலையில் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின் தொடர்ந்து வந்த சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது.இதனால், டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரை ஓட்டி வந்த பெரியசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார். அவருடன் வந்த முருகன்(42) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட புளிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
