×

மனைவியை தாக்கிய கணவன் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.1: கிருஷ்ணகிரி வகாப் நகரை சேர்ந்தவர் முகமது ஜான்(47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா(39). இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி ஏற்பட்ட தகராறில் முகமது ஜான் பலமாக தாக்கி, ஆயிஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த ஆயிஷா, கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, முகமது ஜானை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Mohammed John ,Krishnagiri Waqab Nagar ,Ayesha ,
× RELATED பேனர் வைத்த 7 பேர் மீது வழக்கு