×

தர்மபுரியில் சவுமியாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய ராமதாஸ் பாமகவினர் அதிர்ச்சி

தர்மபுரி, ஏப்.1: தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், சவுமியா அன்புமணியை எதிர்த்து, சரவணன் என்பவரை ராமதாஸ் களம் இறக்கியுள்ளார். இதனால், தர்மபுரி தொகுதி பாமகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தேர்தலின்போது ஓட்டு சரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். நேற்று சென்னையில் இருந்து தர்மபுரி தொகுதிக்கு வந்தார். அவருக்கு பாமக சார்பில் வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வாகனங்களில் பேரணியாக சென்று கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். இந்நிலையில் ராமதாஸ் நேற்று பாமக சார்பில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் அ.சரவணனை, சவுமியா அன்புமணிக்கு எதிராக தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் களம் இறக்கினார். பிஏ படித்த சரவணனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உள்ளனர். சொந்தமாக அச்சகம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அரசியலில் கடந்த 36 ஆண்டுகளாக களத்தில் உள்ளார். தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக போட்டியிடுகிறார். தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் சவுமியா அன்புமணியை எதிர்த்து ராமதாஸ் வேட்பாளர் சரவணனை களம் இறக்கியதால், சவுமியாவுக்கு ஓட்டு சரிய வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Ramadoss ,Soumya ,Dharmapuri ,PMK ,Saravanan ,Soumya Anbumani ,PMK… ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை