×

நாளை வேட்பு மனு தாக்கல்

கோவை, ஏப்.1: கோவை மாவட்டத்தில் நேற்று முன் தினம் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட அளவில் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். 8 ஆண்கள், 7 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நாம் தமிழர் கட்சியை தவிர முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘ மனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 1) அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. நாளை 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.அதற்கு பின் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம், ’’ என்றனர்.

 

Tags : Coimbatore ,Mettupalayam ,Kaundampalayam ,Sulur ,Thondamuthur ,Coimbatore North ,Coimbatore South ,Singanallur ,Kinathukadavu ,Pollachi ,Valparai ,
× RELATED முதல்வரிடம் வேட்பாளர் வாழ்த்து: மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்