×

ஓட்டு பதிவு செய்யறது எப்படி தெரியுமா…?

 

கோவை,மார்ச்29: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட அளவில் 3563 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், இரண்டு உதவி அலுவலர், ஒரு உதவியாளர் என 4 பேர் பணியாற்ற உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு மெஷின் செயல்பாடு தொடர்பாக நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி பெற்றனர். இதில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்பட்டது.கோவை நகரில் தெற்கு தொகுதி அலுவலர்களுக்கு நடந்த பயிற்சியில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டு மெசின்களை முறையாக இயக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டு எண்ணிக்கை விவரங்களை எஸ்எம்எஸ் மூலமாக மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அனுப்ப வேண்டும். வாக்காளர்கள் முறையாக மை வைத்த பின்னர் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். செல்போன், கேமரா உள்ளிட்ட இதர எலக்ட்ரானிக் பொருட்களை ஓட்டு சாவடி மையத்திற்குள் அனுமதிக்க கூடாது. செல்போன் டெபாசிட் கவுண்டர் வைத்து செல்போன்களை வாங்கி வைத்து ஒட்டு போட்ட பின்னர் செல்ேபான்களை ஒப்படைக்க வேண்டும்.

ஓட்டு பதிவு நடத்தும் இடத்தில் தேவையற்ற பேச்சு, வாக்குவாதம் கூடாது. ஏஜன்டுகளை அவர்களுக்கு உரிய இடத்தில் அமர வைக்க வேண்டும். மெசின் சரியாக இயங்குகிறதா என சரி பார்க்க வேண்டும். ஓட்டு பதிவுக்கு முன் மாதிரி ஓட்டு பதிவு நடத்த வேண்டும். இதை ஏஜன்ட் முன்னிலையில் நடத்தி விட்டு பின்னர் ஓட்டுக்களை அழித்து பூஜ்ஜியம் காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டு மெசின் சீல்களை முறையாக அகற்ற வேண்டும் என பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது.

 

Tags : Coimbatore ,
× RELATED கோவை மின்வாரிய அலுவலகங்களில் ஆன்லைன்...