×

உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1.25 லட்சம் பறிமுதல்

 

காரமடை, மார்ச் 31: காரமடை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ.1.25 லட்சம் ரொக்கப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் காரமடை – அன்னூர் சாலையில் தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சர்க்கார் சாமக்குளம் அடுத்துள்ள பச்சாபாளையம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (54) என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,25,620 கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Karamadai ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் வேலை ரொம்ப கஷ்டங்க… 2 ஆயிரம் பேர் பணி விடுவிப்பு கேட்டு மனு