×

காலக்கெடு முடியும் நிலையில் சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சரண்

ராய்ப்பூர்: இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் நக்சல் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நக்சல் இல்லாத நாடாக மாறுவதை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. அரசின் இந்த காலக்கெடு நேற்று முடிவடைய இருந்தது.

இந்நிலையில் இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக சட்டீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் 4 பெண்கள் உட்பட 7 நக்சல்கள் சரண் அடைந்தனர். தந்தேவாடா காவலர் குடியிருப்பில் மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகளிடம் 5 நக்சல்கள் சரண் அடைந்தனர்.

Tags : Chhattisgarh ,Raipur ,EU government ,
× RELATED புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!