மதுரை, மார்ச் 31: மதுரையை அடுத்த ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான பன்முகத் திறன் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாலா, மெர்சி, பானு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் சாந்தி, மணிமாறன் கலந்து கொண்டனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித்திறனை வெளிப்படுத்தும் வகையிலான பேச்சு, பாடல், பரதம், நடனம், நாடகம், மாறுவேடம், கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இவற்றில் சிறப்பாக பங்கேற்றோர் மற்றும் விடுமுறையின்றி பள்ளிக்கு வருகை தந்தோருக்கு சான்றிதழ், பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியர் மோசஸ் ஒருங்கிணைத்தார்.இதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
