- அரியலூர், ஜெயங்கொண்டா
- அரியலூர்
- அரியலூர் மாவட்டம் 149-
- 150-ஜெயங்கொண்டம்
- சட்டசபை
- தொகுதியில்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
அரியலூர் மார்ச் 31: அரியலூர் மாவட்டம் 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர் வாரச்சந்தையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் “அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோன்று 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட உடையார்பாளையம் பேரூராட்சி சந்தையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் “அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம்” தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், அரியலூர் வட்டாட்சியர் தேவகி, ஆண்டிமடம் வட்டாட்சியர் சுசீலா, வருவாய் துறையினர், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
முதல் நாளான நேற்று குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கீர்த்தி வாசன் தங்களது சின்னமான ஏர் கலப்பையை தோளில் சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து, மனுதாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டருக்கு முன்பாக அமைக்கப்பட்டு இருந்த பேரிகாடு முன்பு நின்றுகொண்டு, ஏதோ வழக்கம்போல் ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் நீண்ட நேரம் கோஷம் போட்டுவிட்டு, பேரிகாடை கடந்த பிறகும் ஏர் கலப்பையுடன் மனு தாக்கலுக்குச் சென்றார்.
பின்னர் பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உங்கள் கட்சி சின்னமான ஏர் கலப்பை இல்லாமல் சென்றால்தான் உள்ளே செல்ல அனுமதிப்போம் என கூறியதை தொடர்ந்து அதனை மற்றவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல் பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சி ராணி ஏர் கலப்பையுடன் வந்த போது மற்றவர்கள் நெல் கதிர்களை கைகளில் எடுத்து வந்து மேள தாளங்களுடன் சிறிது நேரம் கோஷம் போட்ட பின்னரே மனுத்தாக்கல் செய்யச் சென்றனர்.
மனு தாக்கல் கிடையாது
இன்று (31ம்தேதி) மற்றும் வருகிற ஏப்ரல்- 1,3,5 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும் என்பதால் இந்த தேதிகளில் மனு தாக்கல் செய்ய முடியாது.
