×

சட்டமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேர் வேட்புமனு தாக்கல்

 

தஞ்சாவூர், மார்ச் 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 21 பேர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார், சுயேட்சைகளாக சந்தோஷ், முரளிதரன் ஆகியோர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேபோல், ஒரத்தநாடு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருமுருகன், ஏகநாதன், சுயேட்சையாக அஜீஸ்கண்ணன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்ணன், உதயகுமரன் ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த், திருவிடைமருதூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கோவி.செழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பேராவூரணி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புவனா மணியரசன், ரமாரவி ஆகியோரும், திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் து.செந்தில்நாதன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேட்சையாக அப்துல்ரஹீம் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

Tags : Thanjavur district ,Thanjavur ,DMK ,Naam Tamilar Katchi ,Tevag ,Tamil Nadu ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டத்தில் 100 சதவீதம்...