ஒரத்தநாடு, மார்ச் 31: அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், ஒரத்தநாடு சட்டமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிகாட்டில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு திமுக வேட்பாளருமான வைத்திலிங்கம் இல்லத்தில் அதிமுக, பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
