- அரசு பள்ளி ஆண்டுவிழா
- திருச்செங்கோடு
- வளர்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- திருச்செங்கோடு யூனியன்
- சுரேஷ்
- மாவட்ட கல்வி அலுவலர்
- Palaniswami
- மாவட்ட மேம்பாட்டு மையம்
- மேற்பார்வையாளர்
- சந்திரசேகர்
- பள்ளி நிர்வாகக் குழு
- கந்தசாமி
- முனியப்பன்…
திருச்செங்கோடு, மார்ச் 31: திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் பழனிசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்திரசேகர், பள்ளி மேலாண்மைக் குழு கந்தசாமி, முனியப்பன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் தங்கவேல் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், வெப்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.விழாவில், சதீஸ்குமார், மேலாண்மைக்குழு தலைவர் வினிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நாகராஜன், முன்னாள் ஆசிரியர்கள் கீதா, சத்யா வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் பிரபு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வடிவேல், கோகிலா, நித்யா, சத்யா, மௌனா மற்றும் சாரண இயக்க மாணவர்கள் செய்திருந்தனர்.
