×

திருச்செங்கோட்டில் ரூ1.05 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, மார்ச் 29: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. பூலாம்பட்டி, சங்ககிரி, அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், தர்மபுரி, பென்னாகரம், தலைவாசல், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8500 முதல் ரூ.15359 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.7000 முதல் ரூ.13109 வரையிலும், பனங்காளி ரூ.8899 முதல் ரூ.33673 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1510 மூட்டைகள் ரூ.1.05 கோடிக்கு விற்பனையானது.

Tags : Trichenkot ,Trichengod ,Trichengo Agricultural Producers Cooperative Sales Association ,Bulampatti ,Sangakiri ,Anthiur ,Thuraiur ,Thammambatti ,Upliyapuram ,Dharmapuri ,Pennagaram ,Thalawasal ,Athur ,
× RELATED மதியம் 12-3 மணி வரை வெளியில் செல்லக்கூடாது