×

தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

சேலம், மார்ச் 31: சேலத்தை அடுத்த வீராணம் தாதம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவர் மனைவிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சதீஷ்குமார் தட்டிக்கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு தாதம்பட்டி ஆர்ஐ அலுவலகம் அருகே சதீஷ்குமார் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோபிநாத், சதீஷ்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில், உன் மனைவியுடன் பழகுவதை பற்றி நீ கேட்கக்கூடாது எனக்கூறியுள்ளார். தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.1,500 பணத்தை பறித்துக்கொண்டு கோபிநாத் தப்பிச் சென்றார். இதுபற்றி வீராணம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட கோபிநாத்தை (35) அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,Sathish Kumar ,Gandhinagar, Dadhampatti, Veeranam ,Gopinath ,
× RELATED திருச்செங்கோட்டில் ரூ1.05 கோடிக்கு மஞ்சள் விற்பனை